நகைச்சுவை 2

காதலி:     உனக்கு தாடிவைத்தால்
                  நல்லா இருக்கும் டா!!!!!

காதலன்:  கழட்டிவிடப்  போறேன்னு 
                       நேரா சொல்லு டி.

நகைச்சுவை 3

பேத்தி : பாட்டி.... பொருக்கிப்பசங்க வராங்க....

பாட்டி : நீ உள்ள போடி..

பேத்தி : பாட்டி.... இதைப் படிக்கிறவனும் வரான்.

பாட்டி : இரு இரு நானும் வரேன்...

நகைச்சுவை 1

நடத்துனர்:      நான் மூன்று தடவை விசில்
அடித்தும் பஸ் ஏன் நிற்கவில்லை? 

ஓட்டுனர்:        நான் ஆறு தடவை பிரேக் அடித்தே பஸ்        நிக்கலை, நீ  மூன்று தடவை விசில் அடிச்சா மட்டும்  பஸ் நின்னுடுமா? 

கணவனுடன் ஒரு உரையாடல்

மனைவி: என்னங்க சொர்க்கத்தில் கணவனும்  மனைவியும் சேர்ந்து வாழ முடியாதாமே?

கணவன்: அதனாலதான்டி அது சொர்க்கம்.

Nurse மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை

புதிதாகப்  பிறந்த குழந்தை Nurse ஐ பார்த்துக் கேட்டது

கரண்ட் இருக்கா? 

Nurse: இல்லை.

குழந்தை: அடக் கடவுளே, நான்

மறுபடியும் தமிழ்நாட்டிலே பிறந்துவிட்டேனா. 


உரையாடல்

ஆள் 1 : நான் பிறந்தது சென்னையில் 
ஆனால் படிச்சது மும்பையில்.

ஆள் 2 : அப்போ ஸ்கூல்' க்கு போக
 ரொம்ப நேரம் ஆகியிருக்குமே?  

ஹாஸ்பிடலில் ஒரு உரையாடல்

டாக்டர்:  இது நல்ல மருந்துதானே அப்புறம் ஏன் சரியாகவில்லை? 

மருந்து காலியாகிவிட்டதா?

நோயாளி: இல்லை, பாட்டில் மேலே " to keep it tightly close" ன்னு எழுதி இருதுச்சு அதான்.